crossorigin="anonymous">
உள்நாடுபொது

சம்பள அதிகரிப்பு ஜனவரி 20 கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டம் – ஜோசப் ஸ்டாலின்

அதிபர் ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டவாறு ஜனவரி மாதம் 20ஆம் திகதி கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்போம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

யாழ் மத்திய கல்லூரியில் அதிபர் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் போதே நேற்று (18) சனிக்கிழமை இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு 120 நாட்களுக்கு மேல் அதிபர் ஆசிரியர்களின் சம்பள நிலுவை கோரி ஒன்றிணைத்து பாரிய போராட்டத்தை நடத்தினோம். இது ஆசியாவிலேயே அதிபர் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து நடத்திய மாபெரும் போராட்டமாக பார்க்கப்படுகிறது.

போராட்டத்தின் எதிரொலியாக அரசாங்கம் 30 மில்லியன் ரூபாய்களை சம்பளமாக வழங்குவதற்கு உறுதிமொழி வழங்கிய நிலையில் நாமும் எமது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினோம்.

எதிர்வரும் 2020 ஜனவரி 20ஆம் திகதி அனைவருக்கும் சம்பள தினம் அத்தினத்தில் எமக்காக உறுதியளிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும்” என்றார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 41 = 51

Back to top button
error: