இலங்கையில் கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடும்போது, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் கடந்த 15 நாட்களுக்குள் மாத்திரம் 3715 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும், டெங்கு நோய் அறிகுறிகள் காணப்படுமிடத்து, தாமதமின்றி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியம் என்று விசேட வைத்திய நிபுணர் சிரந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நிலவும் கொவிட் தொற்று நோய் காரணமாக சில டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளுக்கு செல்ல தயங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.