இலங்கையில் மேலும் 3 Omicron கொவிட்-19 திரிபு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) வைரஸ் தொற்று விசேட நிபுணர் கிறிஷான் ஜூட் ஜயமஹ இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் இன்று (22) மேற்கொள்ளப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இதனைத் தெரிவித்தார்.
மூவரில் ஒருவர் தன்சானியாவிலிருந்து வந்தவர் என்பதுடன், ஏனைய இருவரும் சூடானிலிருந்து வந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இம்மாதம் 16 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாட்டிற்கு வந்த 33, 35, 47 வயதுடைய குறித்த மூவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இலங்கையில் இதுவரை 7 ஒமிக்ரோன் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது