சிவனொளிபாதமலை – ஹட்டன் வீதியில், எஹெலகணுவ எனும் இடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று (23) பி.ப 12.30 மணியளவில் இடம்பெற்ற சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில், எரிகாயங்களுக்குள்ளான இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உணவு சமைத்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்த இளைஞர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டதாக, மாவட்ட வைத்திய அதிகாரி எச். இர்ஷாட் தெரிவித்தார்.
சம்பவத்தில் இரத்தினபுரி, குருவிட்ட, பட்டதொட்ட பகுதியைச் சேர்ந்த 18 வயதான தேவிந்த சசிமால் எனும் இளைஞரே காயமடைந்துள்ளார்.
சிவனொளிபாதமலை உச்சியிலுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.