crossorigin="anonymous">
உள்நாடுபொது

வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மரணம்

நுவரெலியா – உடப்புஸ்ஸலாவை பிரதான வீதியில் நேற்று (23) இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 46 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிசார் தெரிவித்தனர்.

இராகலை பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளில் ஒன்று ஹாவாஎலிய பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதுண்டு பின் நுவரெலியா மாநகரசபைக்கு சொந்தமான கழிவு நீர் ஏற்றும் பவுசர் ஒன்றின் பின் பகுதியில் மோதுண்டும் விபத்து இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா போக்குவரத்து பொலிசார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 21 + = 23

Back to top button
error: