crossorigin="anonymous">
உள்நாடுபொது

பொலிஸ் துப்பாக்கிச் சூடு, பொலிஸ் சார்ஜென்ட் ஜனவரி 06 வரை விளக்கமறியல்

விடுமுறை வழங்கப்படாமையினாலே இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் நேற்று (24) வெள்ளிக் கிழமை இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பொலிஸ் அதிகாரிகள் பலியான சம்பவம் தொடர்பில், பொலிஸ் சார்ஜென்டை ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்தில் ஒரு கான்ஸ்டபிள் சாரதி உள்ளிட்ட 3 கான்ஸ்டபிள்கள் மற்றும் ஒரு சார்ஜென்ட் ஆகிய நால்வரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்

சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சிவில் உடை தரித்து உள்ளக கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டவர் எனவும் விடுமுறை கோரிய நிலையில் வழங்கப்படாமையினாலேயே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாண்டிருப்பைச் சேர்ந்த நவீனன் மற்றும் ஒலுவிலைச் சேர்ந்த அப்துல் காதர், பிபிலை மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களைச் சேர்ந்த துசார, பிரபுத்த ஆகிய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 62 − = 53

Back to top button
error: