முத்தமிழ் பிரதேச இலக்கிய விழாவும் “தேனகம் சிறப்பு மலர்” வெளியீடும்
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் முத்தமிழ், பிரதேச இலக்கிய விழா மற்றும் “தேனகம் சிறப்பு மலர்” வெளியீட்டு நிகழ்வும் மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றது.
பிரதேச செயலாளரும் கலாசார பேரவை மற்றும் பிரதேச கலாசார அதிகார சபையின் தலைவருமான வி.வாசுதேவன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக நடைபெற்றது.
முத்தமிழ் பிரதேச இலக்கிய விழா நிகழ்வானது மங்கள விளக்கேற்றலுடன் தமிழத்தாய் பாடல் இசைக்கப்பட்டு கலாசார கீதத்துடன் ஆரம்பமானது, நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.லட்சண்யா பிரசந்தனின் வரவேற்புரையுடன் கலை இலக்கிய கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச கலாசார பேரவையும் பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்திய இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், கலைஞர்கள் கௌரவிப்பு இதன்போது இடம்பெற்றிருந்தது.
நிகழ்வில் அதிதிகளாக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி திருமதி.கெனடி பாரதி , கலைஞர் செல்லையா ஞானபிரகாசம் கலாபூஷணம் சண்முகம் வைரமுத்து உட்பட எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கலாசார உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.