crossorigin="anonymous">
உள்நாடுபொது

தேசிய மீலாதுந் நபி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த தேசிய மீலாதுந் நபி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் கபூர் மண்டபத்தில் இன்று (26) நடைபெற்றது.

தேசிய மீலாதுந் நபி போட்டிகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வருடாவருடம் நடாத்தி வருகின்ற நிலையில் இவ்வருட போட்டிகள் கொவிட்19 தொற்று காரணமாக இணைய வழியில் இடம்பெற்றன.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆரம்ப பரிசளிப்பு நிகழ்வு கடந்த ஒக்டோபர் 19 ம் திகதி அலரிமாளிகையில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன் தொடராக ஏனைய மாணவர்களுக்கான பரிசளிப்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுல்கள் திணைக்கள பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் தலைமையில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி மண்டபத்தில் இன்று நடைபெற்றதுடன் பிரதம அதிதியாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் கலந்து கொண்டார்.

கெளரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர்களாக காதர் மஸ்தான், இலங்கை பிரதமரின் முஸ்லிம் சமய விவகார இணைப்பாளர் கலாநிதி ஹஸன் மெளலானா, பிரதமரின் முஸ்லிம் சமய ஆலோசகர் பர்ஸான் மன்சூர், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பொதுச் செயலாளர் அஷ்ஷெய்யித் அக்ரம் நூராமித் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்

ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் தேசிய மீலாதுந் நபி போட்டிகளில் முதலாமிடங்களைப் பெற்ற மாணவர்களின் பேச்சுகளும் இடம்பெற்றன.

தேசிய மீலாதுந் நபி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு வரவேற்புரைய திணைக்களப் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் நிகழ்த்தியதுடன் மீலாதுந் நபி குறித்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பொதுச் செயலாளர் அஷ்ஷெய்யித் அக்ரம் நுாராமித் உரையாற்றினார். இதன்போது நாடளாவிய ரீதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகள் விருதுகளை வழங்கி வைத்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 17 − = 13

Back to top button
error: