வெளிநாடு
தென்னாப்பிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்
நிற வெறிக்கு எதிராக போராடிய தென்னாப்பிரிக்க பேராயர்
தென்னாப்பிரிக்கப் பேராயர் எமெரிட்டஸ் ஆர்ச்பிஷப் டெஸ்மண்ட் டுட்டு மறைவு, நிற வெறிக்கு எதிராகப் போராடிய தென்னாப்பிரிக்கப் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு நேற்று (26) காலமானார்.
பேராயர் எமெரிட்டஸ் ஆர்ச்பிஷப் டெஸ்மண்ட் டுட்டு, வயது 90. நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பதவியேற்றபோது வானவில் தேசம் என்ற சொல்லாடலை உருவாக்கி பிரபலப்படுத்தியவர் டுட்டு.
வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்த்து அமைதி வழியில் போராடியதால், 1984 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டெஸ்மண்ட் டுட்டுவுக்கு வழங்கப்பட்டது.