crossorigin="anonymous">
உள்நாடுபொது

துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பதவி உயர்வு

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (24) பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி கொல்லப்பட்ட 4 பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பொலிஸ் நிலைய சம்பவத்தில் உயிரிழந்த ஒலுவிலைச் சேர்ந்த கே.எல்.எம். அப்துல் காதர், பாண்டிருப்பைச் சேர்ந்த அழகரெத்தினம் நவீனன், பிபிலையைச் சேர்ந்த டி.பி.கே.பி. குணசேகர, சியம்பலாண்டுவவைச் சேர்ந்த டி.எம்.டி.எச். புஷ்பகுமார ஆகிய 4 பொலிஸாருக்கும்  பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

01. கே.எல்.எம். அப்துல் காதர் – சார்ஜென்ட் நிலையிலிருந்து உப பொலிஸ் பரிசோதகர் ஆக தரமுயர்வு
02 அழகரெத்தினம் நவீனன் – கான்ஸ்டபிள் நிலையிலிருந்து சார்ஜென்ட் ஆக தரமுயர்வு
03. டி.பி.கே.பி. குணசேகர – கான்ஸ்டபிள் நிலையிலிருந்து சார்ஜென்ட் ஆக தரமுயர்வு
04. டி.எம்.ரி.எச். புஷ்பகுமார – கான்ஸ்டபிள் சாரதி நிலையிலிருந்து சார்ஜென்ட் சாரதி ஆக தரமுயர்வு

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெஹிகம உட்பட இரு பொலிஸார் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி கொல்லப்பட்ட 4 பொலிஸ் அதிகாரிகளினதும் வீடுகளுக்கு பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று (26) விஜயம் செய்ததோடு, அவர்களது குடும்பத்தினருக்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் சார்பில் அனுதாபங்களைத் தெரிவித்திருந்தார்

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கைதான பொலிஸ் சார்ஜென்டிற்கு ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 5 =

Back to top button
error: