crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘கூட்டு முயற்சியின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்’

இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

“வெற்றிகளைவிட ஒரு நாடு என்ற வகையில் தோல்விகள் மற்றும் துன்பங்கள் பலவற்றையும் கடந்து புது வருடமொன்று பிறக்கும் இவ்வேளையில் அனைத்து இலங்கையருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் (01) தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்துச் செய்தியில் மேலும்

“அதிகாரத்தின் நிகழ்ச்சி நிரலை நம் கையில் வைத்துக்கொண்டு இந்த நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள முடியாது, ஆனால் இந்த சீரழிந்த சூழ்நிலையிலிருந்து கூட்டு முயற்சியின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தேசிய பேரழிவு ஏற்பட்டுள்ள இத்தருணத்தில் குறுகிய அதிகார வெறிக்குப் பதிலாக தூய்மையான மக்கள் சார்பு வேலைத்திட்டத்தில் இறங்குமாறு இந்த நாட்டின் பிரஜைகளின் தலைமுறை என்ற வகையில் மீண்டும் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

உலகின் பல்வேறு நாடுகள் பல்வேறு பேரழிவுகளுக்கு முகம் கொடுத்து எவ்வாறு அந்தத் துன்பங்களில் இருந்து எழுந்து நிற்கின்றன என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.மேலும் இந்த நாட்டின் இரண்டு கோடியே இருபது இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் மற்றும் எதிர்கால சந்ததியின் பெயரால் பொறுப்புடன் செயல்படுவதற்கான முழுமையான வாய்ப்பு வந்துள்ளது என்பதையும் மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

இந்த துரதிர்ஷ்டவசமான காலத்தில் உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் புதிய சிந்தனையின் படிப்பினையை இயற்கையே அமைதியாக நமக்குக் கற்றுத் தந்துள்ளது. மேலும் இது பற்றி உறுதியாக சிந்தித்து புத்தாண்டை ஒரு புதிய தொடக்க உணர்வை அடைந்து கொள்ள எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

இலங்கையின் அனைத்து அன்புக்குரிய மக்களுக்கும் மீண்டும் ஒரு தேசமாக எழுச்சி பெறுவதற்கான உன்னத அபிலாஷைகளை அடைவதற்கான வலிமையும் தைரியமும் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்” என இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 29 + = 35

Back to top button
error: