crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘நிலவுகின்ற நிலைமையில் 2022 நலமானதாக அமையூமென எதிர்பார்க்க இயலாது’

மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர திசாநாயக்க விடுத்துள்ள புதுவருட செய்தி

“கடந்த வருடத்தில் நிலவிய பிரமாண்டமான நெருக்கடிகளையூம் தோள்மீது சுமந்துகொண்டே 2021 ஆம் ஆண்டினை நிறைவு செய்து 2022 புது வருடத்தில் எமது நாடு காலடி எடுத்து வைக்கின்றது. எனவே நிலவுகின்ற நிலைமையில் புதிய வருடம் எவ்விதத்திலும் நலமானதாக அமையூமென எதிர்பார்க்க இயலாது. எனினும் அதேவேளையில் புதிய வருடத்தில் வேறுவிதமான நலமான காட்சியொன்றும் உள்ளது. மக்கள் புதிய அரசியல் பயணமொன்றைத் தொடங்க ஆரம்பித்துள்ளமையே அதுவாகும்.” என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர திசாநாயக்க (01) விடுத்துள்ள புதுவருட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

தொடர்ந்தும்

“சனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் தோல்விநிலையினதும் அவர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமூக பொருளாதார அரசியல் முறையின் தோல்வி நிலையினதும் மத்தியில் இன்றளவில் நாடும் மக்களும் பாரிய அனர்த்தத்திற்கே இலக்காக்கப்பட்டுள்ளார்கள். இதன் நீளம் அகலம் ஆழம் பற்றி புதிதாக விபரிக்க அவசியமேற்படாத அளவூக்கு ஒட்டுமொத்த மக்களுக்கும் தமது அன்றாட வாழ்க்கை ஊடாக அது பற்றிய அனுபவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக வளர்ந்துவந்த முதலாளித்துவ சமூக முறையின் நெருக்கடியானது இன்றளவில் அதன்; உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. நவலிபரல் உபாயமார்க்கத்தின் ஊடாக பேணப்பட்டு வந்த பொருளாதார முறைமை முற்றாகவே சீரழிந்துவிட்டது. இறந்த சடலமொன்றாக மாறியூள்ள இலங்கை முதலாளித்துவத்தின் துர்நாற்றம் இன்றளவில் மக்கள் வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்கள் ஊடாக மக்களால் உணரத்தக்கதாக ஆரம்பித்துள்ளது. நறுமணப் பொருட்களை பூசுவதன் மூலமாக அது பரவூவதை தடுக்க இயலாது.

அத்தியாவசிய நுகர்வூப் பண்டங்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. அரிசி தேங்காய், மரக்கறி வெங்காயம்இ மிளகாய், பேக்கறி தயாரிப்புகள், பால் மா ஆகிய உணவூப் பொருட்கள் தொடக்கம் சவர்க்காரம், பற்பசைகள் போன்ற அன்றாட நுகர்வூப் பொருட்களினதும் எரிவாயூ, விறகு, எரிபொருள் போன்ற மனைசார் அவசியப்பாடுகளினதும் அனைத்துக் கட்டிடப் பொருட்களினதும் விலைகள் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவூக்கு ஏற்கெனவே உயர்வடைந்துள்ளன.

எரிபொருள் விலை உயர்வடைவதன் விளைவாக பஸ் கட்டணங்கள், வாடகை ஊர்திகளின் கட்டணங்கள் அதிகரிப்பு அண்மித்துக் கொண்டிருக்கின்றன. பண்டங்களின் தட்டுப்பாடு காரணமாக அதிக விலையைச் செலுத்தியேனும் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் கியூ+ வரிசைகளில் சேர்ந்துகொள்ள மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

அதிக விலையையூம் பிரயத்தனத்தையூம் தாங்கி பெற்றுக்கொண்ட கேஸ் சிலிண்டர் வெடித்துவிடுமோ என்ற அச்சத்துடன் வீட்டில் வாழவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
இவையெதற்குமே பொறுப்புக்கூறுகின்ற ஆட்சியாளர்கள் அல்லது ஆட்சி உள்ளதென்பதை எவருமே நினைத்துக்கொள்ள முடியாத அளவூக்கு அவர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பது முட்டாள்த்தனமான முடிவூகள்இ தம்பட்டமடித்தல்கள் மற்றும் வீம்பு வார்த்தை பேசுதல் மூலமாக மாத்திரமே உணரப்படுகின்றது.

இத்தகைய சுற்றுச்சுழல் நாட்டில் நிலவூகின்ற பின்னணியிலேயே 2021 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2022 புதிய வருடம் உதயமாகின்றது. 72 வருடங்களாக கற்றுக்கொள்ள இயலாமல்போன அரசியல் பாடங்களை கடந்த இரண்டு வருடங்களுக்குள் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளமை மூலமாகவே இது தனித்துவமான நிலைமையாக அமைகின்றது. அ

னுபவித்துக் கொண்டிருக்கின்ற இந்த பாரிய அழிவூக்குள் பெறுகின்ற அனுபவங்கள் மக்களுக்கு புதிய எதிர்பார்ப்பினையூம் எடுத்து வந்துள்ளது. பெரும்பாலானோர் தமது பண்டைய அரசியல் கருத்தியல்களை ஒதுக்கிவிட்டு புதிய பாதையொன்றுக்காக தன்னிச்சையாகஇ திடசங்கற்பத்துடன் அணிதிரண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த நெருக்கடியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புகின்ற இயலுமைபடைத்த அரசியல் இயக்கத்தை தெரிவூசெய்யத் தொடங்கி உள்ளார்கள். மிகவூம் மோசமான வருடமொன்றின் இறுதியில் பிறக்கின்ற புதிய வருடத்தின் “நற் செய்தி” அதுவாகும்.

எனவே இந்த வருடமானது நாட்டுக்கான புதிய எதிர்பார்ப்புடனேயே ஆரம்பிக்கின்றது. அது இந்நாட்டு மக்கள் இதுவரை தெரிவூசெய்த தவறான வங்குரோத்து நிலையடைந்த அரசியல் பாதையைக் கைவிட்டு புதிய அரசியல் பயணமொன்றை ஆரம்பிக்கத் தயாராகி உள்ளமையாகும். நாட்டை உருப்படியாக்குகின்ற உண்மையான மக்கள் இயக்கம் தற்போது வேகமாக கட்டியெழுப்பட்டு வருகின்றது. காட்டிக் கொடுப்பிற்கு இன்னல்களுக்கு மற்றும் விரக்திக்கு இலக்காக்கப்பட்ட மக்கள் இப்போது அவர்களின் சரியான இடத்தை கண்டுபிடித்துள்ளார்கள்.

இத்தருணத்தில் நாட்டையூம் மக்களையூம் துன்பங்களிலிருந்து மீட்டெடுக்கின்ற தேவை நிலவூகின்ற அனைவரதும் மனங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்ற விடயம் அதுவாகும். தற்போது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என சம்பிரதாயபூர்வமாக தெரிவித்த நல்வாழ்த்தினை மாற்றியமைத்து உண்மையிலேயே நாட்டுக்கும் மக்களுக்கும் நலமானதாக அமைகின்றஇ நாட்டையூம் மக்களையூம் வெற்றியீட்டச் செய்விக்கின்ற புதிய வருடமொன்றாக மாற்றிக்கொள்ள இயலும்.
இலங்கையில் இதுவரை தோன்றிய நேர்மையான ஊழலற்றஇ தன்னலமற்ற மனிதர்களின் சேர்க்கை உண்மையான மக்கள் இயக்கம் இவ்வருடத்தில் பரவலாக கட்டியெழுப்பப்படும் என்பதோடு அது நாட்டையூம் மக்களையூம் வெற்றியின்பால நெறிப்படுத்தும்.

அது நாட்டையூம் மக்களையூம் இந்த அவமதிப்பிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் நிச்சயமாகவே மீட்டெக்கும். அந்த புதிய அரசியல் பயணத்திற்காக ஊக்கத்துடனும் நம்பிக்கையூடனும் முன்நோக்கி வருகின்ற அனைவருக்கும் இந்த புதிய வருடத்திற்காக நாங்கள் நல்வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.” என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர திசாநாயக்க (01) விடுத்துள்ள புதுவருட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 84 − 76 =

Back to top button
error: