இலங்கையிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (03) முதல் ஆரம்பமாகின்றன
பாடசாலைகளை சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பராமரிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட்19 தொற்று நோய் காரணமாக சுமார் ஆறு மாதங்களுக்கு பாடசாலைகள் மூட வேண்டியிருந்தது. இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு முடிவடையும் பாடசாலை விடுமுறையை 10 நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.