இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என இலங்கை பிரதமர் அலுவலகம் (03) தெரிவித்துள்ளது
பிரதமர் அலுவலகம் இது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது
பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் சிலவற்றில் இன்றைய தினம் (03) இது குறித்து வெளியாகி வரும் வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களை பிழையாக வழிநடத்தும் வகையில் இடம்பெறும் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை முற்றாக மறுப்பதாகவும் இலங்கை பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.