அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரசாங்க வெளியீட்டு பணியகம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் (06) வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் திறந்து வைக்கப்பட்டது.
அரசாங்க வெளியீட்டு பணியகத்தின் 6 வது மாவட்ட அலுவலகமாக இவ்வலுவலகம் அமைவதுடன் இதற்கு முன்னர் கண்டி, காலி, அனுராதபுரம், வவுனியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் இப்பணியகம் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தினால் வெளியிடப்படும் வெளியீடுகளை இங்கு விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும். வார நாட்களில் காலை 8:30 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை தேவையான வெளியீடுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரால, மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாடிகோரால, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் ஆரியவதி கலப்பதி, அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் உட்பட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.