இலங்கை முழுவதும் தினமும் 2 – 2 1⁄2 மணித்தியாலங்களுக்கு மின் வெட்டை அமுல்படுத்த இன்று (10) முதல் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்
இலங்கை மின்சார சபையினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்
தினமும் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களிலும், முற்பகல் 11.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும்,
மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில் தலா 45 நிமிடங்களாக இரண்டு தடவைகளும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய மின் கட்டமைப்புக்கு அவசியமான போதியளவான மின்சாரத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.