இலங்கையில் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று (10) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் முதலாம் வகுப்பு முதல் 13ஆம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளும் வழமைபோன்று இன்றைய தினம் முதல் நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் சூழ்நிலை நடைமுறையில் உள்ள சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றி அனைத்து பாடசாலைகளையும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறப்பதற்கான அனுமதியை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளார்.