![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2022/01/election-commission-e1641907292574-780x450.jpg)
இலங்கையில் 2021 ஆம் ஆண்டில் மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்ற ரீதியில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையாளர் நாயகத்தினால் அறிக்கை ஒன்று விடுக்கபட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக பதிவு செய்யப்பட்டுள்ள 3 கட்சிகளும் பின்வருமாறு.
1. தமிழ் மக்கள் கூட்டணி
2. நவ லங்கா நிதாஸ் பக்சய
3. தமிழ் முக்போக்கு கூட்டமைப்பு
தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சி, வடக்கின் முன்னால் முதல் அமைச்சர் சி.பி விக்னேஷ்வரனால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்காக அரசியல் கட்சி பதிவுக்கான விண்ணப்பங்களை கோருவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதேவேளை தொடர்ச்சியாக 3 சபைக் கூட்டம் அல்லது தொடர்ச்சியாக 90 நாட்கள் சபை கூட்டத்திற்கு வருகை தராததன் அடிப்படையில் பதவியை இழந்த உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களை மீண்டும் சபை உறுப்பினர் பதவிக்காக நியமிப்பதற்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு கட்டளை சட்டத்திற்கு அமைவாக மேற்கொள்ள முடியயாது என தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.