2022 வருடத்தில் நடைபெறவுள்ள உயர் தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் மாற்றமெதும் இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி பெரேரா தெரிவித்தார்.
உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2021 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்தது. இருப்பினும் இவை இரண்டு முறை பின்போடப்பட்டன.
முன்பு திட்டமிட்ட வகையில் புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 22 ஆம் திகதியும், உயர்தர பரீட்சை இந்த வருடம் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேரா கூறினார்.