crossorigin="anonymous">
உள்நாடுபொது

2023 வரை உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைப்பு – அரசாங்கம்

உலக நாடுகளில் பரவிய கொவிட் – 19 இலங்கையில் ஏற்பட்டதினால், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொற்றினால் பொருளாதாரம் மற்றும் வாழ்கை நிலையில் ஏற்பட்ட பாதிப்பினால் தற்பொழுது தேர்தலை நடத்தகூடிய ஸ்திர தன்மைநாட்டில் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கமைவாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது 2 வருட காலம் வரையில் நல்லாட்சி அரசாங்கமே நாட்டை நிருவகித்தது. இந்த காலப்பகுதியில் உள்ளுராட்சி மன்றங்களின் நடவடிக்கைகளை அவற்றினால் உரிய வகையில் முன்னெடுப்பதற்கு முடியாமல் போனதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாடு தற்பொழுது கொவிட் தொற்றை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாதுள்ளது. இந்த நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்ட வகையிலேயே இருந்து வருகின்றது.

இதன் காரணமாக இந்த நடவடிக்கைகளை உரிய வகையில் முன்னெடுப்பதற்காக உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒரு வருடத்திற்கு நடத்தாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 63 − = 54

Back to top button
error: