![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2022/01/police2-e1642146247743-780x470.jpg)
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு கொழும்பு நகரில் இன்று (14) முதல் மூன்று தினங்களுக்கு விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, குற்றச் செயல்களையும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்போம் எனும் தொனிப் பொருளில் தேசிய பாதுகாப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.