இலங்கை மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளதாக சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உரத்தில் தீங்கு விளைவிக்கக் கூடிய பக்டீரியா உள்ளதாக கூறி இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்திருந்ததுடன் இந்த நிலையில், அதற்கான பணத்தை செலுத்துவதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையை வழங்கியிருந்தது. இதனால் இலங்கை மக்கள் வங்கியை சீனா கறுப்புப் பட்டியலில் உள்ள்ளடக்கியது
இரண்டு தரப்பினரும் நீதிமன்றில் இணக்கப்பாட்டை எட்டிய நிலையில், மக்கள் வங்கி 6.9 மில்லியன் அமெரிக்க டொலரை கடந்த 7 ஆம் திகதி சீனாவுக்கு செலுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலிலிருந்து சீனா விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.