முல்லைத்தீவு மாவட்ட செயலக தைப்பூசை பொங்கல் விழா

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தைப்பூசை பொங்கல் விழா ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் மற்றும் கிராமிய நிர்வாகக் கிளையினரின் ஒருங்கிணைப்பில் பாரம்பரிய முறைப்படி இன்று( 18) இடம்பெற்றது.
நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது மாவட்ட செயலக முன்றலில் அலுவலக ஊழியர்களால் கோலமிடப்பட்டு, கும்பம் வைக்கப்பட்டு கரும்பு, மாவிலை, தோரணங்கள், வாழைகள் என்பன கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து மாவட்ட செயலக முன்றலிலிருந்து மேளதாளங்களுடன் மாட்டுவண்டியில் சென்று தைப்பூச நன்நாளில் முன்னெடுக்கப்படும் மரபுவழிப் பண்பாடான புதிர் எடுத்துவரப்பட்டதைத் தொடர்ந்து அதனை பாரம்பரிய முறைப்படி உரலிலிட்டு அரிசியாக்கப்ட்டு பின் பொங்கல் பானை வைக்கப்பட்டு புத்தரிசியால் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டு பூசை வழிபாடுகளுடன் மிகவும் பக்தி பூர்வமான முறையில் இடம்பெற்றிருந்தது.
பொங்கல் விழாவில் மேலதிக அரசாங்க அதிபர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.