இலங்கை முழுவதும் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிகின்றது. கடந்த வார இறுதியில் இடம்பெற்ற விடுமுறைக்கு பின்னரே இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திலும் குறைவாக காணப்பட்டது. சில தினங்களை தவிர்ந்த ஏனைய தினங்களில் இத்தொகை 800 ஆக குறைவடைந்துள்ளது.
தற்பொழுது கொவிட் தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த தினத்தில் நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் 829 பேர் பதிவாகினர். நேற்று (20) பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 827. நேற்று கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டது.
இதற்கமைவாக இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 255 ஆக அதிகரித்தது.