இந்திய குடியரசு தின கொண்ட்டாட்டம் இன்று டெல்லியில்
இந்திய தலைநகர் டெல்லியில் குடியரசு தினத்துக்கான கொண்ட்டாட்டம் இன்று (26) இன்னும் சில நிமிடத்தில் தொடங்கவுள்ளது. அடர் பனி காரணமாக இந்த ஆண்டு காலை 9 மணியளவில் இந்த கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ளன.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு குடியரசு தின விழாவை பார்வையிட வெளிநாட்டு தலைவர்கள் அழைக்கப்படவில்லை.
இன்றைய விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், அரசுத்துறை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
குடியரசு தலைவர் மாளிகை முதல் இந்தியா வரை நீளும் ராஜ்பாத் சாலை – இங்குதான் குடியரசு தின அணிவகுப்பு தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் குடியரசு தின விழா காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் மாநில ஆளுநர் ஆர்.என். ரவி தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பை பார்வையிடுகிறார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மாநில அமைச்சர்கள், ராணுவம், கடற்படை, விமானப்படை பிராந்திய தளபதிகள், காவல்துறை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். புதுச்சேரியிலும் குடியரசு தினத்தை கொண்டாட சிறப்பான ஏற்பாடுகளை யூனியன் பிரதேச அரசு செய்துள்ளது.(பிபிசி)