கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை – மு.க.ஸ்டாலின்

கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியா – தமிழ்நாட்டில் சென்னை மெரினா கடற்கரையில், மகாத்மா காந்தியடிகள் 75வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவ படத்திற்கு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், சர்வோதயா சங்கத்தின் நூற்பு வேள்வி, காந்திய இசைப்பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் கூறுகையில்,
”மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று,கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.(பிபிசி)