crossorigin="anonymous">
உள்நாடுபொது

கார் வீதி விபத்து சம்பவத்தில் இளைஞர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் நாச்சிக்கள்ளி வேளாங்கண்ணி ஆலயத்திற்கு அருகில் நேற்று (29) அதிகாலை திருமண விருந்து நிகழ்வொன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்பொது இடம்பெற்ற கார் வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளரர்.

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி தெற்கு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற அதிகாலை வேளையில் கற்பிட்டி பாலக்குடா பகுதியில் இருந்து குறிஞ்சிப்பிட்டி பகுதியை நோக்கிப் பயணம் செய்த சொகுசு கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்தமையால் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள தொலைபேசி சேவை வழங்கும் தூணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது குறித்த சொகுசு காரில் பயணம் செய்த மூவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 76 − = 73

Back to top button
error: