crossorigin="anonymous">
உள்நாடுபொது

உமா ஓய ஆற்றில் நீரில் அடித்துச் சென்ற 5 சடலங்களும் மீட்பு

பதுளை – எட்டம்பிட்டி பகுதியிலுள்ள கெரன்டி ஆற்றில் நீராடச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களையும், மீட்புப் பணியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

உமா ஓய ஆற்றில் நீராடச் சென்ற வேளையில், நேற்று (29) மாலை ஐவர் நீரில் அடித்துச் சென்றிருந்தனர். இவ்வாறு நீரில் அடித்துச் சென்ற நால்வரின் சடலங்கள் நேற்றைய தினம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், யுவதியொருவரின் சடலத்தை நேற்றைய தினம் கண்டுபிடிக்க முடியவில்லை.

குறித்த யுவதியை தேடும் பணிகள் இன்று (30) முன்னெடுக்கப்பட்ட நிலையில், பிற்பகல் அவரது சடலத்தை மீட்புப் பணியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

எட்டம்பிட்டி பெருந்தோட்டப் பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், 11 பேர் அடங்கிய குழுவொன்று ஆற்றிற்கு நீராடச் சென்றுள்ளது.

இந்த ஆற்றின் கீழ் பகுதியிலுள்ள மிக ஆழமான பகுதியில் நீராடிக் கொண்டிருந்த தருணத்திலேயே, இந்த இளைஞர், யுவதிகள் நீரில் அடித்துச் சென்றுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

சம்பவத்தில் எட்டம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதான ராஜா டேவிட் குமார், 21 வயதான சிவ சுப்ரமணியம் காஞ்சனா, 22 வயதான பவாணி, 18 வயதான சிந்து மற்றும் 20 வயதான சிரியா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.(பிபிசி)

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 2

Back to top button
error: