crossorigin="anonymous">
உள்நாடுபொது

கர்ப்பிணி தாய்மார் மத்தியில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு

சுமார் 500 கர்ப்பிணித் தாய்மார் கொவிட் வைரஸ் தொற்று

இலங்கையில் கர்ப்பிணி தாய்மார்கள் மத்தியில் கொவிட் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக இருப்பதாக குடும்ப சுகாதார அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்

சுமார் 500 கர்ப்பிணித் தாய்மார் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டார். இதன் காரணமாக கொவிட் வைரஸால் ஏற்படக்கூடிய சிக்கல் நிலையை குறைப்பதற்கு பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வைத்தியர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

இம்முறை நடைபெறவுள்ள உயர் தர பரீட்சையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான மாணவர்களின் வசதி கருதி சில வைத்தியசாலைகளில் பரீட்சை எழுதுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 75 + = 76

Back to top button
error: