“லொரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் பயப்படவில்லை” – கனடா பிரதமர்
“லொரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் பயப்படவில்லை” என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் ஜஸ்டின் ட்ரூடோ பேசும்போது,
“இந்த கரோனா காலம் அனைவரையும் வெறுப்படைய செய்துள்ளது. நாம் இன்னமும் கரோனாவுக்கு எதிரான போரில் வெல்லவில்லை. ஆனால், கடந்த சில நாட்களாக நாட்டின் தலைநகரில் போராட்டம் நடத்தும் சிலரின் நடவடிக்கையால் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லொரி ஓட்டுநர்கள் போராட்டத்தால் கனடா பயப்படவில்லை. இந்த நடத்தைக்கு கனடாவில் இடமில்லை. நான் மிகவும் தெளிவாக இருக்க விரும்புகிறேன். சிறு வணிகத் தொழிலாளர்கள் மீது துஷ்பிரயோகம் செய்பவர்கள் மற்றும் வீடற்றவர்களிடமிருந்து உணவைத் திருடுபவர்களை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம்.
இனவாதக் கொடிகளைப் பறக்க விடுபவர்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்கள் படைவீரர்களின் நினைவிடத்தை அவமதிப்பவர்களுக்கு அடிபணிய மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.(இந்து)