கொவிட் தடுப்பூசி வழங்களில் மாத்தளை மாவட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட உள்ளதாக மாத்தளை மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவரும், பொது நிர்வாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் (02) தெரிவித்தார்.
மாத்தனையில் இடம்பெற்ற மாவட்ட கொவிட் விழிப்புணர்வுக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவி்த்தாவது
“மாத்தளை மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்கள், அரச துறை காரியாலயங்கள், கள உத்தியோகத்தர்களான சமுர்தி துறை மற்றும் கள அலுவலகர்கள், முகாமைத்து ஊழியர்கள், போன்ற சகல பொதுத்துறை ஊழியர்களுக்கும் முன் உரிமை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்த அடிப்படையில் எதிர் வரும் தினங்களில் சுமார் 8000 பொதுத்துறை ஊழியர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுப்படும்
அதே நேரம் மாத்தனை மாவட்த்திற்கு சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் தேவைப்படுவதாகவும் இவ்வாரம் ஒரு இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்க உள்ளதுடன் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள கிராம அதிகாரி பிரிவுகள் ரீதியாக இவை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மாத்தனை மாவட்டத்தில் 3100 அரச ஊழியர்கள், பொதுமக்களுடன் முன்னிலையில் பணிபுரிபவர்களாக இனம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு முன் உரிமை அளிப்பது அவசியம்” என்றும் குறிப்பிட்டார்.