crossorigin="anonymous">
உள்நாடுபொது

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்க உத்தரவு

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற மேனகா விஜேசுந்தர மற்றும் நீல் இத்தவெல ஆகிய நீதிபதிகள் குழாமினால் உத்தரவிட்டுள்ளது.

2014 இல் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை, பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எடுத்துக் கொண்ட நீதிமன்றம் அவரை பிணையில் விடுவிக்குமூறு, புத்தளம் மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கடந்த 2020 ஏப்ரல் 14ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்தாரிகளுக்கு உதவியதாக தெரிவிக்கப்பட்டு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் CID யினரால் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது தொடர்பான வழக்கு புத்தளம் மேல் நீதிமனற்றத்தில் இடம்பெற்று வரும் நிலையில், கடந்த ஜனவரி 28ஆம் திகதி பிணைக் கோரிக்கை விடுக்கப்பட்ட போது, பிணை வழங்குவதற்கு சட்ட மாஅதிபர் ஆட்சேபனை தெரிவிக்காத போதிலும், அது தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டதல்ல என்பதனால் பிணை உத்தரவை நிராகரிப்பதாக புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்திருந்தார். அத்துடன் இது தொடர்பான உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றில் பெறுமாறும் அறிவுறுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வினால் விடுக்கப்பட்ட பிணைக் கோரிக்கை மனு கடந்த புதன்கிழமை (02) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அது தொடர்பான உத்தரவை இன்றையதினம் (07) அறிவிப்பதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது. மனுதாரர் சார்பில் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜராகியிருந்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 55 − 54 =

Back to top button
error: