(நதீர் சரீப்தீன்)
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தர பரீட்சைகள் மாசி மாதம் ஏழாம் திகதி முதல். மார்ச் மாதம் வரையில் நடைபெறுகின்றன இப் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் தற்போதைய வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப அதிகரிக்கப்பட வேண்டும் என பரீட்சை கடமைகளில் ஈடுபடும் அரசாங்க ஊழியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்
பரீட்சை கடமைகளில் ஈடுபட்டு வருவோருக்கு கிடைக்கக் கூடிய ஒரு நாள் கொடுப்பனவு 2000 ரூபா விலும் குறைவாகக் காணப்படுவதாகவும். நாட்கூழி வேலைகளில் ஈடுபடுவோர் இதற்கும் அதிகமாக கூலி பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது
அதிபர்.ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பரீட்சை மண்டபங்களில் கடமையாற்றிய வருகின்றனர்
இவர்களுக்கான கொடுப்பனவுகளை கணிசமான அளவில் அதிகரிப்பதுடன் அவற்றை உடன் வழங்கிட பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுபவர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.