இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் தொடர்பாக, வணிகக் கப்பல் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து குற்றவியல் விசாரணை திணைக்களம் நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளது.
கப்பலின் தலைவர், கப்பல் நிறுவனம் மற்றும் உள்ளூர் முகவருக்கும் இடையிலான மின்னஞ்சல்கள் குறித்து குற்றவியல் விசாரணைத் திணைக்களம் ஆய்வு செய்து அவற்றைப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
ஏப்ரல் 27 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் அத்தகைய தரப்பினரிடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட தகவல்கள் இதில் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று வானிலை சீரானால் பொலிசார் குழுவொன்று கப்பலுக்குள் செல்ல எதிர்பார்ப்பதாகவும் அத்துடன், புலனாய்வு அதிகாரிகள் இன்று கப்பலை பார்வையிட செல்லவிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவர்களுள், அரச ஆய்வாளர் அல்லது அவரது பிரதிநிதி கலந்து கொள்விருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.