crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 11 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை யாழ்ப்பாணம் − நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இந்த மீனவர்கள் பயணித்த மூன்று படகுகளையும், கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், நெடுந்தீவிலிருந்து சுமார் ஒன்றரை கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 43 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த மீனவர்களை கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை இவர்கள் இந்தியா திருப்பி அனுப்பப்படவில்லை.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 27 − = 20

Back to top button
error: