இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் மாதம் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கடந்த 06 முதல் 08 ஆம் திகதி வரை இந்தியாவுக்கு மேற்கொண்ட இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமையை இலங்கை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி சென்றிருந்த அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அழைப்பு விடுத்தார்.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமையை இலங்கை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.