crossorigin="anonymous">
வெளிநாடு

சீனா நேபாள எல்லைக்குள் ஊடுருவல்

சீனா தங்கள் எல்லைக்குள் ஊடுருவலில் ஈடுபட்டுள்ளதாக நேபாள அரசு முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான எல்லை இருக்கும் நிலையில், சீனாவின் அத்துமீறல் குறித்த நேபாள அரசின் குற்றச்சாட்டு குறித்த அறிக்கை பிபிசிக்கு கிடைத்துள்ளது.

மேற்கு நேபாளத்தின் ஹூம்லா மாவட்டத்தில் சீனா அத்துமீறுவதாக கூறப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த அறிக்கை தயாரிக்க அரசால் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் இந்த ஊடுருவல் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. அதே சமயம் பிபிசியின் கேள்விகளுக்கும் நேபாள அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்த அறிக்கை ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை. சமீபத்திய சில ஆண்டுகளில் நேபாள அரசு, சீனாவுடனான தன் உறவை மேம்படுத்திக்கொள்ள முயற்சித்து வந்தது.

நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை இமயமலையை ஒட்டி சுமார் 1,400 கி.மீ உள்ளது. இந்நிலையில், இந்த அறிக்கையின் முடிவுகள் சீனாவுடனான உறவுகளை மேம்படுத்தும் நேபாள அரசின் முயற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.(பிபிசி)

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: