crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஶ்ரீமதி சாரா ஹல்டன் இம்மையார் (Ms. Sarah Hulton) அவர்கள் இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்

கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு பற்றியும் கருத்துத் தெரிவித்தார்.

வணிகப் பொருளாதாரம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கக்கூடிய பங்களிப்பு தொடர்பாகவும் உயர்ஸ்தானிகர் ஆராய்ந்தார்.

2030ஆம் ஆண்டாகும்போது, இந்நாட்டு வலுசக்தி உற்பத்தியில் 80சத வீதத்தை மீள்பிறப்பாக்க வலுசக்தி மூலம் பெற்றுக்கொள்வதற்கு  அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு அவசியமான தொழிநுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும், சூரிய சக்தியை களஞ்சியப்படுத்தல் மற்றும் பரிமாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும், சாரா ஹல்டன் அவர்கள் இன்று இணக்கம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில்பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முதலாவது செயலாளர் அன்ரூ பிரைஸ் (Andrew Price), ஜனாதிபதி பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 45 + = 46

Back to top button
error: