இலங்கை மின்சார சபை தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளதால் மின்சாரத்தை துண்டிப்பு தொடர்பில் நாளை (15) பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை கோருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவில் நடைபெற்ற சந்திப்பில் இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதோடு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்வெட்டு அமுல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நிலவும் வறட்சியான காலநிலையினால் நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் அன்ரூ நவமணி குறிப்பிட்டார்.