இலங்கை பாராளுமன்ற சார சங்ஹிதா ஆய்வு புலமை இலக்கிய நூலின் மூன்றாவது பதிப்புக்கான ஆக்கங்கள் கோரல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எச்.ஈ.ஜனகாந்த சில்வா அவர்கள் வெளியிட்டார்.
இதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் திகதி வரை “உலகமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கலுக்கு எதிரான (Antiglobalization) போக்குகளின் மத்தியில் பாராளுமன்ற முறைமைகள் என்ற பிரதான தொனிப்பொருளின் கீழ், பதினொரு உப தலைப்புக்களில் ஆக்கங்கள் கோரப்படுகின்றன.