இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் ‘சார சங்ஹிதா’ புலமை இலக்கிய நூலின் இரண்டாம் பதிப்பு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அண்மையில் பாராளுமன்றத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க கௌரவ சபாநாயகரிடம் இந்நூலைக் கையளித்ததுடன், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எச். ஈ. ஜனகந்த சில்வா மற்றும் தொடர்பாடல் திணைக்கள ஊடக முகாமையாளர் நிம்மி ஹாதியல்தெனிய ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.
கடந்த 08 ஆம் திகதி பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
சட்டவாக்க செயற்பாடுகள், நிலைபேறான அபிவிருத்தி, தேர்தல் முறைமை மற்றும் அதன் திருத்தங்கள், பாராளுமன்ற அறிக்கையிடலும் வெகுஜன ஊடகமும், பொதுமக்கள் தொடர்பு மற்றும் இலங்கை பெண்கள் அரசியலில் புதிய போக்கு ஆகிய பல்வேறு தலைப்புகளில் கல்வித்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களின் கட்டுரைகள் இந்த நூலில் உள்ளடங்கப்பட்டுள்ளன.