crossorigin="anonymous">
வெளிநாடு

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பொலிஸார் கைது

கனடாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தூதரக பாலம் மீது போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர்.

கனடாவில் பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. மேலும், லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கனடாவில் போராட்டங்கள் தொடர்ந்தன.

நாட்டின் முக்கிய இடங்களில் கட்டாய தடுப்பூசி எதிராக லாரி ஓட்டுநர் போராட்டத்தை தொடர்ந்தனர். அங்காங்கே லாரிகள் நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர்.

இதில் கனடாவை, அமெரிக்காவுடன் இணைக்கும் தூதரக பாலத்தில் போராட்டக்காரர்கள் நெடும் தூரத்திற்கு லாரிகளை நிறுத்தி வைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக கனடா மற்றும் அமெரிக்க வர்த்தக தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிக்கையும் விடுத்தனர்.

இந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு தூதரக பாலத்தில் நிறுத்தப்பட்ட லாரிகள் அகற்றப்பட்டு, கனடா போலீஸாரால் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து ஒட்டாவா மேயர் ட்ரிவ் டில்கன்ஸ் கூறும்போது, ”இன்றுமுதல் தேசிய பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட முடக்கம் முடிவுக்கு வருகிறது” என்று தெரிவித்தார்.

போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பிறகு, தூதரக பாலத்தில் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போக்குவரத்து தொடங்கப்படும் என்று கனடா அரசு தெரிவித்துள்ளது.(இந்து)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 85 = 92

Back to top button
error: