(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)
தம்புள்ளை பிரதேச விவசாயிகள் நாட்டின் மொத்த பெரிய வெங்காயத் தேவையின் 25 சதவீத்ததை அருவடை செய்ய தயாராகி வருவதாக தம்புல்லை பிரதேச கமகல சேவைகள் பிரிவு (18)தெரிவிக்கிறது
கலேவல, தேவஹுவ, சீக்கிரிய போன்ற பிரதேசங்களில் மொத்தம் 6000 ஹேக்கர் நிலப்பரப்பில் பெரிய வெங்காய உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் ஊடாக மொத்தம் 60000 மெற்றிக் தொன் அருவடை எதிர்பார்ப்பதாகவும் அது நாட்டின் மொத்த வருடாந்தத் தேவையின் 25 சதவீதம் எனவும் பிரதி விவசாய ஆணையாளர் திணைக்களம் தெரிவித்தது.இதில் சுமார் 5000 விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
எனவே அடுத்த பெரும்போக அருவடைய அடுத்து உள்ளூர் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் அளவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கடைுக்க வேண்டும் எனவும் உளளுர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.