crossorigin="anonymous">
உள்நாடுபொது

பொல்லடி அரங்கேற்றமும் கலாசார விழாவும்

இறக்காமம் இஸ்லாமிய சமூக கலாசார மரபு அமைப்பினுடைய பொல்லடி அரங்கேற்றமும் கலாசார விழாவும் நேற்று (21) திங்கள் கிழமை அமீர் அலிபுர வித்தியாலத்தில் அமைப்பினுடைய தலைவர் கே.எல்.எம். அலியார் தலைமையில் இடம்பெற்றது.

ஆரம்ப கால மக்கள் வாழ்வியல் அம்சங்களை கலை வடிவில் பிரசவிப்பது சாதாரணமான நடைமுறையாகும். கிழக்கிலங்கையின் மிகவும் வரலாற்று தொன்மைவாய்ந்த இறக்காமம் பிரதேசமானது, கிராமிய கலை மான்மியத்தின் பல சிறப்புக்களைக் கொண்டு காணப்படுவதோடு அம்பாரை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களின் முகப்பாகவும் காணப்படுகின்றது.

பல்வேறு கலை வடிவங்கள் காணப்பட்டாலும் பொல்லடியானது பிரசித்தம் பெற்ற ஒன்றாகவும் தனித்துவம் வாய்ந்த ஒன்றாகவும் காணப்படுகின்றது . மேலும் பொல்லடி , மந்திரம் , பேயாட்டி மந்திரம் , சீனடி , சிலம்படி, வால்வீச்சு, நாட்டு வைத்தியம் , கட்டுப்பாட்டு , பள்ளுப்பாட்டு, பக்கீர் பைத், போன்ற கிராமிய கலைகள் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

பொல்லடி அரங்கேற்றல் நிகழ்வில் மூத்த கலைஞரும் அண்ணாவியாருமான கலாபூஷணம் பி.டி. யாசின்பாவா அவர்கள் கிராமிய பொல்லடிக் கலையை வளர்ப்பதற்காக ஆற்றிவரும் பங்களிப்பிற்காக அதிதிகளால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்.

மூத்த கலைஞரும் அண்ணாவியாருமான எம்.எஸ். சமுகூன் அவர்களும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு கிராமிய கலை வடிவங்களை வளர்ப்பதில் பங்களிப்பு செய்து அதற்காக மாணவர்களை செயற்பட்டுவரும் இறக்காமம் இஸ்லாமிய சமூக கலாசார மரபுரிமை அமைப்பின் தலைவர் கே.எல்.எம். அலியார் அவர்களின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

பொல்லடி பயிற்சியை பூர்த்திசெய்த மாணவர்களின் பொல்லடி அரங்கேற்றல் விஷேட நிகழ்வு இடம்பெற்றதோடு அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வின் விஷேட அம்சமாக பொல்லடி இசைக்கலைஞர்களின் பாரம்பரிய மரபுகளில் ஒன்றான பள்ளிக்காணிக்கையும் இறையாசி அரங்கேற்றமும் இறக்காமம் ஜும்ஆ பள்ளிவாசல் முன்றலில் ஜும்ஆ பள்ளிவாசல் பள்ளிவாசல் தலைவர் அல்ஹா ஏ.கே. அப்துர் ரஊப் (ஹாமி) முன்னிலையில் இடம்பெற்று காணிக்கையும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல். விஷேட அதிதிகளாக மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக், இறக்காமம் அமீர் அலிபுர வித்தியாலய அதிபர் எம்.எஸ். லாஹிர், மதீனா வித்தியாலய அதிபர் எம்.ஐ. ஜௌபர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கௌரவ அதிதிகளாக சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர், கலாச்சார உத்தியோகத்தர்களான ஏ.எல். இப்றாலெப்பை (முஸ்லிம் சமய கலாச்சாரம்), திருமதி வசந்தா ரன்ஞனி (மாகாணம்), திருமதி ஏ. நௌபீஸா (மத்திய), உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 87 − 80 =

Back to top button
error: