crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேம திலக்க காலமானார்

பத்திரிகை ஊடகதுறையில் புரட்சியை ஏற்படுத்திய சிரேஸ்ட ஊடகவியலாளரான சுனில் மாதவ பிரேம திலக்க நேற்று மாலை காலமானார். இறக்கும் பொழுது அவருக்கு 78 வயது. 1944ல் பிறந்த இவர் பத்திரிகை துறைக்கு பாரிய பணியாற்றியுள்ளார்.

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேமதிலக்கவின் இறுதி கிரியை எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இவர் லேக்கவுஸ் நிறுவனத்தின் சிலுமின பத்திரிக்கையின் முன்னாள் பிரதம ஆசிரியரான பிரேம திலக்கவின் புதல்வராவார். பாடசாலை காலம் தொடக்கம் பத்திரிகையாளராக பணியாற்றும் எண்ணக்கருவுடன் செயற்பட்டு வந்த இவர், லேக்கவுஸ் நிறுவனத்தில் சிலுமின பத்திரிகை ஊடாக பத்திரிகை துறையில் பிரவேசித்தார். இவர் பல்வேறு நூல்களை எழுதியதுடன் மொழிபெயர்ப்புக்களையும் மேற்கொண்டுள்ளார்.

நேற்று மாலை தலங்கம பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்ப்ட நிலையில் இவர் காலமானார். இவரது பூதவுடல் பைப்ப (Pipe) வீதியில் அமைந்துள்ள ஊடகவியலாளர் வீடமைப்பு தொகுதியில் இவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 1 =

Back to top button
error: