வெளிநாடு
ரஷ்யா பிரிட்டன் விமானங்களுக்கு ரஷ்யா வான் பரப்பில் பறக்க தடை
பிரிட்டனுடன் தொடர்புள்ள அனைத்து விமானங்களும் தனது வான் பாதையில் பறக்க ரஷ்யா தடை விதித்துள்ளது.
யுக்ரேன் மீதான படையெடுப்புக்குப் பதிலளிக்கும் விதமாக ரஷ்யாவின் முதன்மை கரியர் ஏரோஃப்ளாட்டை தன் நாட்டில் தரையிறங்க விடாமல் பிரிட்டன் தடுத்தது.
அதைத் தொடர்ந்து, “பிரிட்டனுடன் தொடர்புள்ள அல்லது பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான விமானங்களுக்கு ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,” என்று ரஷ்ய விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
“பிரிட்டன் விமான போக்குவரத்து அதிகாரிகளின் முடிவுகளுக்கு” எதிர்வினையே இது என்று ரஷ்யா விவரித்துள்ளது.(பிபிசி)