ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம்
தீர்மானத்தை ரஷ்யா.தனது வீட்டோ அதிகாரம் கொண்டு தோற்கடித்தது
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக நிபந்தனையின்றி திரும்ப வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து ஆஸ்திரேலியா, எஸ்டோனியா, ஃபின்லாந்து, ஜார்ஜியா, ஜெர்மனி, இத்தாலி, லீசெஸ்டைன், லக்ஸம்பெர்க், நியூசிலாந்து, நார்வே, போலந்து, ருமேனியா, பிரிட்டன் ஆகிய 11 நாடுகள் வாக்களித்தன. ஆனால் 15 உறுப்பினர்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி நேற்று முதலே இருந்தது.
ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. ஆனால் ரஷ்யாவும் இந்திய தரப்புடன் பேசியது. இந்த சூழலில் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. இருப்பினும் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரம் கொண்டு தோற்கடித்தது ரஷ்யா.(இந்து)