crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மரதன்கடவலயில் கோர விபத்து, இருவர் உயிரிழப்பு

திருகோணமலை-ஹொரவபொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இன்று (01) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளார்.

இறத்மலை பகுதியிலிருந்து ஹொரவபொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லொறியும் ஹொரவபொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற காரொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இன்று  காலை இடம்பெற்ற குறித்த விபத்தில், காரின் சாரதி மற்றும் அதில் பயணித்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஹொரவபொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் தற்போது ஹொரவபொத்தானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(தகவல்:மொஹம்மட் ஹாசில்)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 60 + = 66

Back to top button
error: