இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் முழுமையாக ஆரம்பிப்பது சாத்தியமில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் விடுதிகளில் தங்கி கல்வி கற்பதனால்; அவர்களிடையே கொவிட் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ளவாறு பல்கலைக்கழக கட்டமைப்பு தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விடுதிகளில் உள்ள அனைத்து வசதிகளையும் பொதுவாகப் பயன்படுத்துவதனால் மாணவர்களிடையே கொவிட் பரவுவதைத் தடுக்க முடியாது. இவ்வாறானதொரு நிலைமையினால் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களும் வவுனியா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியும் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.