இலங்கை அமைச்சரவை அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகிய இருவரும் அமைச்சர் பதவிகளில் இருந்து இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (03) மலை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடக வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில அமைச்சுக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
உதய கம்மன்பில வகித்த அமைச்சு, காமினி லொக்குகேவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன்,
விமல் வீரவன்சவின் அமைச்சு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
01. காமினி லொகுகே – எரிசக்தி அமைச்சர் (முன்னர் மின்சக்தி)
02. பவித்ரா வன்னியாராச்சி – மின்சக்தி அமைச்சர் (முன்னர் போக்குவரத்து)
03. எஸ்.பி. திஸாநாயக்க – கைத்தொழில் அமைச்சர் (முன்னர் அமைச்சு பதவி இல்லை)
அமைச்சர்கள் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47 (II) (ஆ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கு அமைய குறித்த இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.